ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவைஅது குறிக்கிறது.
கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் யாரும் வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
(சுருக்கமாக ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு. இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று.
இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே!
இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று.
ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் "உமிரி"என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி.
கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம்.
சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி (லென்ஸ்) மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது.
1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர்.
இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.
மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.
11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர்.)
கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டதாக அறிய முடிகிறது
சேதுபதி அரசர் நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.
தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
அன்று தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
அப்போது சேதுபதி (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்)
அரச வாரிசு இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.
மேலும் ,
கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.
1974 மற்றும் 1976ம் ஆண்டில் காங்கிரஸ் பிரதமர் இந்திராகாந்தி இந்தியா அரசுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் ஒப்பந்த திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு இந்திய மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் அனுமதி இருக்கிறது. ஆயினும் 10 வருடங்களின் பின் இந்த அனுமதி இல்லாத நிலையில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்என்று இலங்கை அரசு தமிழ் நீனவர்களைக் கைது செய்கிறது
புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தொண்டி அருகே உள்ள நம்புதாளை என்ற ஊரை சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனக்
கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 தொ டக்கம் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்படுகிற து.
மேலும் 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லைஎன்பது ம் ஒப்பந்தம் .
கச்சத்தீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித்அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்ற இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது
1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது.அவையாவன
1. ராமேஸ்வரம், 2. குந்துகால், 3. புனவாசல், 4. முயல் தீவு, 5. பூமரிசான் தீவு, 6. முல்லைத் தீவு, 7. மணல் தீவு, 8. வாலித் தீவு (கச்சத் தீவு), 9. அப்பா தீவு, 10. நல்ல தண்ணீர் தீவு, 11 உப்பு தண்ணீர் தீவு, 12 குடுசடி தீவு என்று பன்னிரண்டு ஆகும்
ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்
1755 முதல் 1763 ஆன் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக் என்பவரின் பெயர் நீரிணைக்கு சூட்டப்பட்டுள்ளது. பாக் நீரிணையும் மன்னார் வளைகுடாவும் பாம்பன் நீரிணை என்ற சிறிய பரப்பால் இணைக்கப்படுகின்றன. இந்தப்பகுதியில் கடலின் அகலம் வெறும் 1350அடி. ஆழம் 10 முதல் 15 அடி வரை தான் இருக்கும்.
நட்பின் நிமித்தம் கச்சதீவு அன்பளிப்பு செய்யப்பட்டதால் அதையாரும் பறிமுதல் செய்ய முயல வில்லை
28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.
இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.
1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று கூறப்பட்டாலும் சாத்தியமில்லாத தான் முடிவு
இலங்கை அரசு 1971 – 1974 வரையில் அங்கு தனது முப்படைகளையும் முகாமிட்டது. போர்க்கப்பலான கஜபாகுவை கச்சத்தீவின் அருகில் நிறுத்தி புனித அந்தோணியர் ஆலயத் திருவிழாவுக்குத் தமிழக மீனவர்கள் வராமல் பார்த்துக் கொண்டது.
1974-ல் கையெழுத்தானது கச்சத்தீவு ஒப்பந்தத்தில் 8 விதிகள் இடம்பெற்றிருந்தன. அதில், ஐந்தாவது விதியின்படி, “கச்சத் தீவுக்கு வருபவர்கள் இதுநாள் வரை வந்து போனது போல வந்து போகவும், கச்சத்தீவை அனுபவிப்பதற்கும் முழு உரிமையுடையவர்கள் ஆவார்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதியை இலங்கை அரசு இதுவரை பின்பற்றவில்லை என்பதே நிதர்சனம். அதன்பின்னர், கச்சத்தீவின் மீதான உரிமையைப் படிப்படியாக இழந்தது இந்தியா. தமிழக மீனவர்கள் நலன் நிலைநாட்டப்படும், கச்சத்தீவை மீட்போம் என்பது ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் உறுதிமொழிகளில் ஒன்றாக இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது.
கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது?என்றால்
முதன்மையானது 1974-ல் இலங்கை இந்தியாவிற்கு செய்த உதவிக்கான பிரதி உபகாரம். அந்தக் கால கட்டத்தில் இந்தியா அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தி, உலக நாடுகளின் கண்டனக் கணைகளை எதிர் கொண்டது. ஜ.நா. சபையில் பாகிஸ்தான், மேற்படி இந்தியாவின் அணு சோதனைக்குக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முயன்றது.
இலங்கை அப்போது இந்தியாவுக்கு அளித்த ஆதரவால், பாகிஸ்தானின் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இலங்கையின் பண்டார நாயகா பதவிக்கு வரும் வரையில் கச்சத் தீவு தொட்ர்பாக எந்த உரிமையையும் இலங்கை கோரவில்லை. ஆனால், பண்டார நாயகா பதவிக்கு வந்த பிறகே கச்சத் தீவின் மீது இலங்கை பல உரிமைகள் கோரியது. கோரிக்கைகளை சாக்காக வைத்து 1974-ல் இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவை கேட்டு பெற்றது. 23.03.1976-ல் இந்தியாவின் வெளியுறவு செயலர் கிளிவல். சின்சிலும் இலங்கையின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர் ஜெயசிங்கேயும் ஒரு சீராய்வு ஒப்பந்தத்தை இரு நாடுகள் சார்பாக ஏற்படுத்தினர். அதன்படி கச்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கும் உரிமை இந்தியாவிற்கு இல்லை என அறுதியிடப்பட்டுள்ளது.
கச்சதீவு உடன்படிக்கையை இலங்கை மீறி வருவதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது, மீனவர்கள் மீன்பிடித்து கொள்ளலாம், வலைகளை காய வைத்து கொள்ளலாம் என்று உடன்படிக்கை உள்ளது.
ஆனால் இதை இலங்கை மீறி வருகிறது. இதனால் கச்சதீவு உடன்படிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்' என பழ.நெடுமாறன் கூறியுள்ளமை சிந்திக்க வைக்கிறது
இந்தியா கச்சதீவை விட்டுகொடுக்க காரணம் பல உண்டு, முதலில் அங்கு மனிதர்கள் யாருமில்லை குடிக்க கூட நீர் இல்லா இடமது, அங்கு போர்ச்சுகீசிய கிறிஸ்தவ துறவியான அந்தோணியாருக்கு ஒரு ஆலயம் உண்டு அவர் கூட அப்பக்கம் செல்வதில்லை. அப்படிபட்ட கச்சதீவு கடத்தலுக்கும் இன்னும் பலவகையான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அக்காலத்தில் இடமானது, அதை தடுக்க பந்தை இலங்கையிடம் தட்டிவிட்டது இந்தியா. இந்த பின்னணியில்தான் அந்த கச்சதீவு ஒப்படைக்கபட்டது,
அப்படியே இலங்கையின் திரிகோணமலை துறைமுக கட்டுப்பாடு இந்தியா கைக்கு வந்தது இன்றும் அங்கு இந்தியநிலைகள் உண்டு . ஆக கச்சதீவினை திரும்ப பெறுவது சாத்தியமல்ல, அப்படி செய்தால் திரிகோணமலையில் இந்தியா சிக்கலை சந்திக்கும். இதனால் கச்சதீவினை மீட்கும் அவசியமில்லை, மீட்கும் அளவு அங்கு ஒன்றுமில்லை. இப்பொழுது செய்யவேண்டியது கச்சதீவில் தமிழக மீணவர்குரிய உரிமையினை மீட்டெடுத்து அங்கு வலை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் சில சலுகைகளை பெற்றுகொடுப்பது, அங்கு சட்டவிரோத காரியம் நடக்காமல் இருக்க இந்திய இலங்கை கூட்டு பாதுகாப்பை வலுபடுத்தலாம். அது இன்னும் நல்லது. கச்சதீவினை பொறுத்தவரை இவ்வளவுதான் செய்யமுடியும் அதற்கு மேல் எதுவும் செய்யவேண்டுமென்றால் ரஷ்யா உக்ரைனில் செய்தது போலத்தான் செய்யவேண்டும்
அதன்பொழுது வெளிநாட்டுத் தலையீடுகள் ஏற்பட வாய்ய்ப்புக்களும் உண்டு


TamilsGuide
கச்சத்தீவு
