TamilsGuide

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உப்புல்மாலி பிரேமதிலக்க தெரிவித்தார்.

வர்த்தமானியின்படி உப்பு இறக்குமதி செய்ய உரிமம் தேவையில்லை.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைக் கொண்ட எந்தவொரு இறக்குமதியாளரும் உப்பை இறக்குமதி செய்யலாம் என்றும் வர்த்தமானி சுட்டிக்காட்டுகிறது.

இதன் கீழ் அயோடின் கலக்கப்படாத உப்பை இறக்குமதி செய்ய முடியும் என்று இறக்குமதி கட்டுப்பாட்டு நாயகம் திருமதி உப்புமாலி பிரேமதிலகா தெரிவித்தார்.

இதற்கிடையில், நுகர்வுக்காக 250 மெட்ரிக் தொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன.
கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உப்பு இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
 

Leave a comment

Comment