TamilsGuide

மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது

மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுபொத பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால் நேற்று (19) பிற்பகல் கட்டுபொதவில் ‘சிசு சரிய’ பஸ் சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சோதனையின் போது, ​​சாரதி மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கட்டுபொத்த, ரதலியகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், பேருந்தில் 16 பாடசாலை மாணவர்களும் இரண்டு தாய்மார்களும் பயணம் செய்தனர்.

குறித்த பேருந்தும் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று (20) நாரம்மல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கும், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நாடு முழுவதும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment