TamilsGuide

உப்பிற்குத் தட்டுப்பாடு - பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தமது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன  கருத்துத் தெரிவிக்கையில் ” ‘தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது  எனவும், இது தொடர்பாக உரிய  அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்  தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் எனவும்,  அதற்காக தாம் காத்திருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை எனவும். பெரும்பாலும் உப்பு தூளே  பயன்படுத்தப்படுகிறது எனவும். உப்புத் தூளிற்கே தற்போது தட்டுப்பாடு காணப்படுவதாகவும்,தெரிவித்த  என்.கே. ஜயவர்தன, அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று தாம்  நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment