TamilsGuide

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு உடனடி இடமாற்றம்

கொட்டாஞ்சேனையில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவியின் விடயத்தில் மேற்படி பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலேயே , இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவியின் வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment