TamilsGuide

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் மிதந்துவந்த நினைவு தூபி

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு தூபிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த மிதக்கும் தூபி நேற்று (17) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை அவதானித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் நான்கு அடி கொண்ட சதுர வடிவில் முள்ளிவாய்காலில் அமைந்துள்ள நினைவு தூபி புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் எழுதப்பட்டிருந்தததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு அருகில் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுவர்த்தி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment