TamilsGuide

வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுவிஸர்லாந்துக்கு விஜயம்

உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78வது வருடாந்த மாநாடு, நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“ஒரு சுகாதாரமான உலகம்”. எனும் தொனிப்பொருளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78வது வருடாந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருடன் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முதல் செயலாளர் நிஷாந்தினி விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment