TamilsGuide

கண் கலங்கிவிட்டது.. மேடையில் எமோஷ்னலாக பேசிய சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் தக் லைப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மொத்த படக்குழுவும் கலந்துகொண்டது. அப்போது தக் லைப் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதை பார்த்தபிறகு சிம்பு மேடையில் எமோஷ்னலாக பேசினார்.

"ரொம்ப எமோஷ்னலா இருக்கு. அவ்ளோ வேலை படத்தில் நடந்திருக்கு. இதை உங்களுடன் பார்க்கும்போது கண் எல்லாம் கலங்கிவிட்டது. மணி சாருக்கு நன்றி."

"மணி சார் என் மீது எப்போதும் ஸ்பெஷல் லவ் வைத்திருப்பார். அதை எப்படி சொல்ல முடியும் என தெரியவில்லை. ஆனால் என் வேலையை படத்தில் ஒழுங்காக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்" என சிம்பு கூறி இருக்கிறார். 
 

Leave a comment

Comment