TamilsGuide

சட்டவிரோத போதைப்பொருளுடன் இந்திய பிரஜை இலங்கையில் கைது

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி வந்த இந்திய பிரஜை ஒருவரை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் (16) கைது செய்துள்ளனர்.

கப்பலில் வந்தவர்களை காங்கேசன்துறை துறைமுக சுங்க பிரிவினர் சோதனையிட்ட போது, இந்திய பயணி ஒருவரின் உடைமையில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கிராம் குஷ் ரக போதை பொருளை சுங்க பிரிவினர் மீட்டுள்ளனர்.

இதை அடுத்து குறித்த நபரை கைது செய்த சுங்க பிரிவினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , மீட்கப்பட்ட போதை பொருளையும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் காங்கேசன்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவரிடம் பொலசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment