• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்

இலங்கை

தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் உயிரிழந்தார்.

திருகோணமலை கந்தளாயை பகுதியை சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை கபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்தினபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply