
யாழ்ப்பாணம் – அராலியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
இலங்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இன்றும்(17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதன்படி, திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தலும் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – நவாலி பகுதியிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் – அராலியில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சி அராலித் தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.