
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் - டொன் டேவிஸ்
கனடா
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் ; டொன் டேவிஸ் | Ensure Tamil Genocide Horrors Never Repeat
இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவுகூருவதற்காக நான் உரையாற்றுகின்றேன்.
இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் ,உயிர்பிழைத்தவர்கள்,அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.
அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும், தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.
மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும்.
நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம்.