
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கேரளா சென்ற ரஜினிகாந்த்- வழிநெடுக ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி காந்த் கேரளாவுக்கு சென்றுள்ளார். அங்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.