யால தேசிய பூங்காவின் மேலும் பல மண்டலங்களை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்க சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அரங்கமுவ என்ற புதிய மண்டலத்தைத் திறப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மூடப்பட்டிருக்கும் மூன்று மற்றும் நான்காவது மண்டலங்களும் மீண்டும் திறக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
மேற்படி மண்டலங்கள் விரைவில் திறக்கப்படும் என்றும், தேவையான வசதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யால தேசிய பூங்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான சுற்றுலாப் பயணிகளின் நெரிசலைக் கையாள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யால தேசிய பூங்காவின் 100,000 ஹெக்டேர் பரப்பளவில், 25,000 ஹெக்டேர் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துள்ளது.
இது 06 நுழைவாயில்களைக் கொண்ட 06 மண்டலங்களைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


