• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சப்ரகமுவ பல்கலை மாணவன் தற்கொலை - சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள் மே 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (மே 16) பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இறந்தவர் சரித் தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயது மாணவர் ஆவார்.

அவரது மரணம் ஏப்ரல் 29 அன்று அறிவிக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணைகளில் அவர் சக மாணவர்களின் பகிடிவதை மூலம் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஆறு மாணவர்கள் மே 04 அன்று கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் ஏனைய நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply