
நானியின் நடிப்பில் தி பாரடைஸ் படத்தின் தீம் பாடல் வெளியீடு
சினிமா
நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமாக "தி பாரடைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பை நவீன் நூலி மெற்ற்கொள்கின்றனர்.
திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'தி பாரடைஸ்' தீம் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இதனை படக்குழு வெளியிட்டுள்ளனர்.