• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிருத்தை கடத்தி வச்சிடுவேன் - விஜய் தேவரகொண்டா

சினிமா

 விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 30-ந்தேதிவெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 'கிங்டம்' படம் வரும் 30-ந்தேதிக்கு பதிலாக ஜூலை 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஜய் தேவரகொண்டா அனிருதின் மேல் உள்ள அன்பை பற்றி பேசியுள்ளார் அதில் "எனக்கு அனிருதை அவரது 3 மற்றும் விஐபி படங்களில் இருந்து பிடிக்கும். நான் அப்போது நடிகனாக இல்லை. அப்போது யோசிப்பேன் நாம் ஒரு நாள் நடிகனாக ஆனால் நம் படத்திற்கு அல்லது நாம் வரும் காட்சியில் அனிருதின் இசை இடம் பெற்றிருக்க வேண்டும் அது இத்தனை வருடங்கள் கழித்து கிங்டம் படத்தில் நடந்துள்ளது. நான் மட்டும் ஒரு அரசனாக இருந்தேன் என்றால் அனிருதை கடத்தி சென்று என் அரண்மனையில் வைத்து என் அனைத்து திரைப்படங்களுக்கும் அனிருதை இசையமைக்க சொல்லுவேன் " என கூறியுள்ளார்.
 

Leave a Reply