• Welcome to TamilsGuide
செய்திகள் 1

DD NEXT LEVEL படத்தில் இருந்து கிஸ்ஸா 47 பாடலை நீக்கியது படக்குழு

சினிமா

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ளது 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்தது.

இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்தனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அப்படத்தில் இடம் பெற்ற கிஸா 47 பாடலை படக்குழு நீக்கியுள்ளது.

Leave a Reply