• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு

இலங்கை

இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தக் காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன.

இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் அதன் கீழ் சாரதி விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
 

Leave a Reply