பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. ஆர்யா தயாரித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இந்துக்களின் மனம் புண்படும் வகையில் 'கோவிந்தா கோவிந்தா கிசா 47' பாடலை வைத்திருக்கிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து, படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் மனு அளித்துள்ளனர். மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீது திருமலை காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலை நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் நடிகர் சந்தானம், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.