மற்றவர்களை மிரட்டி பணியவைக்க நினைத்தால் தனிமைப்படுத்தப்படுவீர்கள் - அமெரிக்காவுக்கு சீன அதிபர் எச்சரிக்கை செலுத்தும் போக்கைக் காட்டும் நாடுகள் இறுதியில் தனிமையில் விடப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரேசில், கொலம்பியா மற்றும் சிலி நாட்டுத் தலைவர்களுடன் பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜி ஜின்பிங், வர்த்தகப் போர்கள் யாருக்கும் பயனளிக்காது என்றும், வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்றும் கூறினார். உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து, ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் உலக அமைதியும் ஸ்திரத்தன்மையும் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்ப் சீனா மீது வரிவிதிப்பு மூலம் தொடங்கிய வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.
இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது உரையில் அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.