TamilsGuide

வடக்கு, கிழக்கில் இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(13) வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, இன்று காலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா – இலுப்பையடி பகுதியில் காஞ்சி வழங்கப்பட்ட அதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை கஞ்சி வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment