TamilsGuide

ஜூலை 4-ல் வெளியாகும் 3BHK

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் கதை தொனியை நுட்பமாக குறிக்கும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் படம் வெளியாவதையொட்டி படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment