TamilsGuide

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை(12) நடைபெற்ற

இதன் போது மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான் இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களுடன்  பகிர்ந்துக்கொண்டார்

மேலும் எமது சமூகத்திற்கான நீண்டகாலமான நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்குகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment