நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்
இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.
சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி.
நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் எதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார்