TamilsGuide

ஏன் பெயர் மாற்றினீர்கள் - மெக்சிகோ கூகிள் மீது வழக்கு

கூகிள் மீது மெக்ஸிகோ வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பயனர்களுக்கான கூகிள் மேப்ஸில் மெக்ஸிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று அழைக்க வேண்டாம் என முன்வைத்த கோரிக்கைகளை புறக்கணித்ததற்காக வழக்குத் தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை கூட்டாட்சி நிறுவனங்களுக்காக வளைகுடாவை அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடுவதற்கு வாக்களித்தது.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment