TamilsGuide

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கொல்லப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 7-ந்தேதி இந்தியா நடத்திய தாக்குதலில் 5 பேரும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்பு, மசூத் அசார் உயிரோடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தியாவுடனான மோதல் போக்கை பயன்படுத்தி பாகிஸ்தானில் மொத்தமாக 39 இடங்களில் பலூசிஸ்தான் போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். 
 

Leave a comment

Comment