காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா தனது அசுர தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.
பாகிஸ்தானும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்டு உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்தியா இந்த தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என பெயர் வைத்துள்ளனர். பாகிஸ்தான் அவர்களது தாக்குதலுக்கு Bunyan-un-Marsoos என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரை பல இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் அந்த தலைப்பில் படம் தயாரிப்பதற்காக தயாரிப்பு கவுன்சிலில் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தலைப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முதலில் தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் தான் இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்.