இலங்கை இராணுவ சிறப்புப் படையின் மாதுறு ஓயா பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு அணிவகுப்பின் போது ஏற்பட்ட விமான விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்களின் நலனை விசாரிக்க இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, பொலன்னறுவை பொது மருத்துவமனைக்குச் சென்றார்.
இதன்போது குறித்த இராணுவ வீரர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.
இதேவேளை, நேற்று காலை 8.17 மணியளவில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று மாதுரு ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் ஏனையோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.