TamilsGuide

தேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவில் இன்று ஆரம்பம்

தேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவை மையமாகக் கொண்டு இன்று முதல் ஆரம்பமாகின்றது.

இந்த விசாக பூரணை வாரம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படுகின்றது.

விசாக பூரணை வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெளத்த விஹாரைகளில் மத வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்த சாசனம், மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகாரத் திணைக்களம் ஆகியவை இணைந்து தேசிய விசாக பூரணை வாரத்தை முன்னெடுத்துள்ளன.

இந்த ஆண்டுக்கான தேசிய விசாக பூரணை விழா நுவரெலியா சர்வதேச பௌத்த மைய விகாரையில் நடைபெறுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த நிலைய விகாரையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு தேசிய விசாக பூரணை விழாவை “நல்ல நற்பண்புகளைக் கொண்ட உன்னதமான நண்பர்களுடன் பழகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment