'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள வால்டன் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது. இதில் ராணுவத்தினர் 4 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் 8 நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளது. கராச்சி, ராவல்பிண்டி, குஜ்ரன்வாலா, சக்வல், பகவல்பூர், மியானோ, சோர், அட்டோக் ஆகிய நகரங்களிலும் ட்ரோன் தாக்குதல் நடந்தது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தற்கொலை படை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.
இதனால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். இதற்கிடையே 9 நகரங்களில் 12 டிரோன் தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இந்த ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. நேற்று அதிகாலை பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய பிறகு அதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் 9 நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளது.