பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓ, இது மிகவும் மோசமானது. என் நிலைப்பாடு என்னவென்றால் நான் இருவருடனும் ஒத்துப்போகிறேன்.
எனக்கு இருவரையும் நன்றாகத் தெரியும். அவர்கள் அதைச் சரிசெய்வதை பார்க்க விரும்புகிறேன். அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன்.
இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் மோசமாகிவிட்டார்கள், எனவே இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.
இருவருடனும் நல்ல உறவுகள் உள்ளன. அது நின்றுவிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏதாவது உதவி செய்ய முடிந்தால், நான் அங்கே இருப்பேன் என தெரிவித்தார்.


