TamilsGuide

3000நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்

தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது.

இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர்.
 

Leave a comment

Comment