இன்று (மே 7) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹர நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார்.
கிரிபத்கொடையில் அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர குற்றப் புலனாய்வுத் துறையால் தேடப்பட்டு வந்தார்.
கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த பிரசன்ன ரணவீர மற்றும் மற்றொரு சந்தேக நபரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.
எனினும், 61 நாட்கள் கைது செய்யப்படாமல் தப்பித்த பிரசன்ன ரணவீர இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூன்று பேர் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.