TamilsGuide

நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றில் இன்று (07) ஆஜராகியுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரசன்ன ரணவீர பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், பிரசன்ன ரணவீர இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment