கொழும்பு மாநகர சபையில் (CMC) தேசிய மக்கள் சக்தி (NPP) 48 இடங்களை வென்றுள்ளது.
ஆனால் தெளிவான பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகளின்படி, ஏனைய கட்சிகள் கூட்டாக 69 இடங்களைப் பெற்றுள்ளன.
அவற்றில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 13 இடங்களையும் வென்றுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 05 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 04 இடங்களையும், சர்வஜன அதிகாரம் 02 இடங்களையும் வென்றுள்ளன.


