TamilsGuide

கனடிய பிரதமரை ஆளுனர் கார்னி என அழைக்கப் வாய்ப்பில்லை - டிரம்ப் 

கனடா பிரதமர் மார்க் கார்னியை “ஆளுனர் கார்னி” எனக் குறிப்பிட வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார்.

‘கவர்னர் கார்னி’ என அழைத்தது இல்லையா? என ஊடகங்கள் கேள்வி எழுப்பயிருந்தன.

“இன்னும் அழைக்கவில்லை. ஒருவேளை அழைக்க வேண்டிய அவசியமிருக்காது எனவும். ஆனால் ஜஸ்டின் டிரூடோவுடன் தமக்கு பல நகைச்சுவையான தருணங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்போது கார்னி பிரதமராகியிருப்பது, கனடாவுக்கே ஒரு பெரிய முன்னேற்றம் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டி ஏற்பாடுகள் தெடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நமது இருநாட்டு உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என நம்புகிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment