TamilsGuide

அமெரிக்காவில் 63 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பெண் உயிருடன் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் சுமார் 63 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1962ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ரீட்ஸ்பர்க் (Reedsburg) நகரிலிருந்து 20 வயது ஆட்ரே பேக்கர்பேர்க் (Audrey Backeberg) காணாமல்போனார். தற்போது அவருக்கு வயது 82 என தெரிவிக்கபப்டுகின்றது.

விருப்பப்பட்டுக் காணாமல் போனபோது பேக்கர்பேர்க்குக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. அதேவேளை காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன் தமக்குக் கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு எதிராகப் புகார் கொடுத்திருந்தார் பேக்கர்பேர்க்.

காணாமல்போன நாளில் வேலையிடத்திலிருந்து சம்பளத்தைப் பெற்ற அவர், சுமார் 480 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இண்டியானாபொலிஸ் (Indianapolis) நகருக்குச் சென்றார்.

அவருடன் அவரது குழந்தைப் பராமரிப்பாளரும் சென்றதாகவும் பாதி வழியில் அவரது குழந்தைப் பராமரிப்பாளர் வீடு திரும்பிய நிலையில் பேக்கர்பேர்க் தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்நிலையில் 63 வருடங்கலின் பின் தற்பொது அந்த பெண்மணியை (Audrey Backeberg) கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment