நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொடைக்கானலுக்கு விஜய் செல்லும் வழி எங்கும் அவருக்கு, த வெ க தொண்டர்களும், ரசிகர்களும் அமோக வரவேற்பை கொடுத்தனர்.
அதே போல் கொடைக்கானலில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு தளத்திலும், விஜய்யை காண ரசிகர்கள் காத்திருந்தனர். அப்படி, காத்திருந்த ரசிகர்களில் ஒருவர் நடிகர் விஜய்க்கு அம்மன் புகைப்படத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
மேலும் பலரும் விஜய்க்கு மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இன்று படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்புகிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


