TamilsGuide

சந்தானத்தை இனி காமெடி ரோல்களில் அதிகம் எதிர்பார்க்கலாம் - சிம்பு

சந்தானம் நடித்துள்ள DD Next Level படத்தின் ரிலீஸ்க்கு முந்தைய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிலம்பரசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

STR 49 படத்தில் நானும் சந்தானமும் மீண்டும் இணைந்து நடிக்கிறோம். தற்போது காமெடி படங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. பெரிய ஹீரோக்களிடம் ஆக்ஷன் மற்றும் ஆக்ரோசம் பொன்றவற்றை எதிர்பார்ப்பதுதான் இதற்கு காரணம். தமிழ் சினிமாவில் ஜாலியான போன்ற படங்களும் வர வேண்டும். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்தேன். நல்ல படம். படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தானம் கதாநாயகனாக நடிக்க சென்றுவிட்டார். அவர் என்னுடனும், ஆர்யாவுடன் இணைந்து, சில படங்களை தேர்வு செய்து காமெடி போன்ற படங்களிலும் நடிக்க வேண்டும். அவரை இனிமேல் அதிகமான படத்தில் பார்க்கலாம்.

இவ்வாறு சிம்பு பேசினார்.
 

Leave a comment

Comment