நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் அடுத்து ஒரு திரைப்படத்தை கண்டிப்பாக இயக்குவேன் என கூறியுள்ளார். அத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும். ஆனால் அத்திரைப்படத்தில் நடிக்க சூர்யாவிடம் இருந்து நிறைய நேர ஒதுக்கீடு தேவைப்படும். அதனால் இப்படத்தின் வேலைகள் எப்பொழுது தொடங்கும் என தெரியாது. ஏனெனில் சூர்யா சார் நிறைய லைன் அப் வைத்துள்ளார்" என கூறியுள்ளார்.


