துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான தற்பொழுது I'm Game என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நஹஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.
கிங் ஆஃப் கொதா திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் மலையாள திரைப்படமாகும். நஹஸ் இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான RDX திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித், இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொள்கின்றனர்.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. திரைப்படம் மலையாள மொழி தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களை ஒவ்வொன்றாக படக்குழு அறிமுகம் செய்து வருகிறது அந்த வகையில். தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் சண்டை இயக்குநராக அன்பறிவு களம் இறங்கியுள்ளனர்.மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


