நாளை நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போது பாதுகாப்பு, சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கு மேலதிகமாக தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 3,126 நடமாடும் ரோந்துப் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத நபர்கள், தேர்தல் நாளன்று கூட தபால் நிலையங்களில் அவற்றைப் பெறலாம் என்றும் தேர்தல் ஆணையகம் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.


