2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி சபைகளுகுமான 221 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலாக இது அமைந்துள்ளதாகவும் மாநகர சபை ஒன்றும் நகர சபை ஒன்றும் 11 பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைந்துள்ளது எனவும் திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் நாளைய தினம்(06) வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் 129 நிலையங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் 3820 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1700 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


