TamilsGuide

Skypeக்கு பதிலாக Microsoft teams - Microsoft நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தனது செயலியான ஸ்கைப் (Skype)-ஐ வரும் எதிர்வரும் 5ம் திகதி முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் ஸ்கைப்பிற்குப் பதிலாக பயனாளர்கள் மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஸ்கைப் பயனாளர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டே டீம்ஸ் செயலியில் இணைந்து கொள்ளலாம் என்றும் பழைய உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் போன்றவை அப்படியே இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரானா காலக்கட்டத்தில் ஜூம் செயலி, கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்தியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment