சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூவரடங்கிய விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.ஏ.வை அமரசிங்க தலைமையில் குறித்த விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தொடர்பில் இதுவரை 16 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இது குறித்து விசாரிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினாலும் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸல்லாவை பகுதியைச்சேர்ந்த 23 வயதுடைய குறித்த மாணவன், சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.