TamilsGuide

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து - பெண்ணொருவர் உயிரிழப்பு

காலி, அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (02) காலை முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மற்றொரு நபர் படுகாயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பெலியத்தவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ‘ரஜரட்ட ரெஜின’ என்ற ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment