TamilsGuide

அரசியலுக்குள் நுழைவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு- விஜய்க்கு அஜித் வாழ்த்து

நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம், அவர்களுக்கு வாழ்த்து என தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் அஜித் குமார் பேட்டி அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஒருவர் அரசியலுக்குள் நுழைவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு.

எனக்கு அரசியல் லட்சியம் எதுவும் கிடையாது. ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தை தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு.

நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம்" என்றார்.
 

Leave a comment

Comment