TamilsGuide

எந்த சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி- ரஜினிகாந்த் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார்.

அப்போது அவர்," பஹல்காம் தாக்குதலால் பொழுதுபோக்கு நிகழ்வான இதில் மோடி பங்கேற்க மாட்டார் என சிலர் கூறினர்.

ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்கு பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார்.

ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a comment

Comment