சமீபத்திய எரிபொருள் விலை குறைப்பு இருந்தபோதிலும், கட்டணங்களை மாற்றியமைக்க மாட்டோம் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி செபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டன.
குறித்த அறிக்கையின் படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் விலை 6ரூபாவினாலும் , 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 20 ரூபாவினாலும், டீசல் லீட்டருக்கு 12ரூபாவினாலும், சூப்பர் டீசல் லீட்டருக்கு 6 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 5 ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிப்பிடத்தக்கது .


